மதுரை அரசு பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
மதுரை அரசு பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
UPDATED : ஆக 28, 2023 12:00 AM
ADDED : ஆக 28, 2023 12:24 PM
தேசிய அளவில் இவ்விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தமிழகத்தை சேர்ந்த இவர் மற்றும் தென்காசி வீரகேரளம்புதுார் அரசு பள்ளி ஆசிரியை மாலதி உட்பட 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்.5ல் டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்குகிறார். மதுரை ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், டேக்வாண்டோ, ஜம்பிங் ஜாக்ஸ் ஆகிய போட்டிகளில் மாணவர்களுடன் சேர்ந்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். கை சிலம்பம் போட்டியில் 300 மாணவர்களை பங்கேற்க வைத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். கூடைப்பந்து உள்ளிட்டவற்றில் அவர்கள் தேசிய அளவில் வென்றுள்ளனர்.இவரது மாணவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் போலீஸ், ராணுவம், உடற்கல்வி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்துள்ளனர். பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் பாக்சிங் கிரவுண்ட், பள்ளியில் அரசு சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் &'ஜிம்&' அமைய காரணமாக இருந்தார்.அவர் கூறுகையில், இதுவரை 6 முறை விண்ணப்பித்து தற்போது தேர்வாகியுள்ளேன். ஆன்லைனில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். மதுரை கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக் குழு நடத்திய நேர்காணலிலும் உரிய ஆவணங்களுடன் விளக்கினேன். விருது பெற செப்.,3 ல் டில்லிக்கு அழைத்துள்ளனர் என்றார்.
