தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் தற்கொலைகளை தடுக்க வலை அமைக்கும் பயிற்சி மையங்கள்

மாணவர் தற்கொலைகளை தடுக்க வலை அமைக்கும் பயிற்சி மையங்கள்

மாணவர் தற்கொலைகளை தடுக்க வலை அமைக்கும் பயிற்சி மையங்கள்


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டா:
நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில், ராஜஸ்தானில் உள்ள ஹாஸ்டல்களில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட், இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வான, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேருகின்றனர். முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கும் ராஜஸ்தானின் கோட்டா நகரம், நுழைவுத் தேர்வு பயிற்சியில் நாட்டில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.ஆண்டுக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோட்டாவுக்கு படையெடுக்கின்றனர். இங்கு ஹாஸ்டல்களில் தங்கி பயிற்சி வகுப்புகளில் சேருகின்றனர். நுழைவுத் தேர்வுகளில் தோல்வி அடையும் அல்லது கடுமையான பயிற்சியை தாங்க முடியாத மாணவர்கள் சிலர் தற்கொலை செய்கின்றனர். கோட்டாவில் கடந்தாண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்த நிலையில், இந்தாண்டில் இதுவரை, 20 பேர் தற்கொலை செய்துள்ளனர்.மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில், கோட்டாவில் உள்ள ஹாஸ்டல்களில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஸ்பிரிங் உடன் கூடிய பேன்களே இங்கு பொருத்தப்பட்டுள்ளன. தற்போது ஹாஸ்டல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில், வலைகள் அமைக்கப்படுகின்றன. மெல்லிய கம்பிகளால் ஆன இந்த வலைகள், உயரத்தில் இருந்து மாணவர்கள் குதித்தாலும் காயங்கள் இன்றி காப்பாற்றும்.சற்று விலை அதிகம் என்றாலும், மாணவர்கள் தற்கொலையை தடுக்கவும், தங்களுடைய மையங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதை தடுக்கவும், கோட்டாவில் உள்ள ஹாஸ்டல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இந்த வலையை பொருத்தி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us