தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/24ம் ஆண்டில் தினமலர்.காம்

24ம் ஆண்டில் தினமலர்.காம்

24ம் ஆண்டில் தினமலர்.காம்


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் நாளிதழ் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு இணையதளம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. காரணம் திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்றாற்போல நமது தமிழ் மக்கள் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக் கிடக்கின்றனர்.தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாதா., நமது உள்ளூர் நிலவரம் தெரிந்து கொள்ள முடியாதா., என்ற அயல் நாட்டு தமிழர்களின் ஏக்கத்தை நிறைவேற்றி கொடுத்தது தினமலர்.காம் என்பது மிகைப்படுத்துவதாக இருக்க முடியாது. தமிழ் பற்று கொண்டவர்கள், நமது ஊர் நிகழ்வு அறிந்து கொள்ளும் ஆவல் ஆகியன தினமலர்.காம் மூலம் பலரது நெஞ்சங்கள் நிரப்பபட்டது. ஆரம்பத்தில் மிக சொற்ப வாசகர்களே இன்டர்நெட் தொடர்பு வசதி பெற்றிருந்ததால் குறைந்த வாசகர்களே தினமலர் இணையதளம் பார்ப்பவர்களாக இருந்தனர்.இன்டர்நெட் வசதி நாளுக்கு நாள் பெருக, பெருக, இணையதள வாசகர்களின் எண்ணிக்கை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அபரிதமாக வளர்ந்து சென்றது.இணையதளத்தில் விளையாட்டு, ஆன்மிகம், சினிமா, வர்த்தகம், வெளிநாடு வாழ் செய்திகள், வெளி மாநில செய்திகள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டதாக தினமலர்.காம் விளங்குகிறது.பல வடிவங்களில் தினமலர்.காம் பல பரிமாணங்களை பெற்றது. தினமலர் டெஸ்க்டாப், இபேப்பர், தினமலர் ஆப், வீடியோ, தினமலர் ஐ பேப்பர் என இன்றைய நவீன முன்னேற்றத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் தினமலர் பார்க்க முடிகிறது. 360 டிகிரி கோணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களை பார்க்க முடியும்.அளவில்லா வீடியோக்கள்மேலும் நாள்தோறும் 24 மணி நேர லைவ் அப்பேட், தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள், உலகளாவிய கண்கவர் படங்கள் என தினமலர்.காம் இன்று பல லட்சம் வாசகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இன்னும் சாதனைகள் பல தொடர வாசகர்களின் அன்பும், ஆதரவும் நல்க வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us