தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் கல்வியை தொடர மணிப்பூர் மாணவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கல்வியை தொடர மணிப்பூர் மாணவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கல்வியை தொடர மணிப்பூர் மாணவர்கள் கோரிக்கை


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் கல்வியை தொடர அரசு உதவ வேண்டும் என மணிப்பூர் மாணவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.மணிப்பூர் குக்கி இன மாணவர் சங்க தலைவர் மேக்சி உள்ளிட்ட மாணவர் குழுவினர் நேற்று தலைமை செயலகம் வந்தனர். சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தானை சந்தித்தனர். அதன்பிறகு மாணவர் சங்க தலைவர் மேக்சி கூறியதாவது: 
மணிப்பூர் மாநிலத்திற்கு தமிழக அரசு, 10 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதற்கு நன்றி சொல்வதற்காக முதல்வரை சந்திக்க வந்தோம். அமைச்சர் மஸ்தானை சந்திக்கும்படி, முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து அமைச்சரை சந்தித்தோம். தமிழக அரசு வழங்கியுள்ள, 10 கோடி ரூபாயை, மணிப்பூர் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும். இந்த நிதி முறையாக சென்று சேருவதை, தமிழக முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.மணிப்பூரில் கடுமையாக பாதிக்கப்பட்டு தமிழகத்திற்கு, 221 குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மணிப்பூரில் பள்ளி, கல்லுாரிகள், பல்கலை கழகங்கள் இயங்கவில்லை. மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள் தீயில் எரிந்து விட்டன. மணிப்பூர் மாணவர்கள் தமிழகத்தில் தங்கி பள்ளி, கல்லுாரி கல்வியை தொடர அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.உதவிகள் செய்யப்படும்
தமிழக அரசு வழங்கிய, 10 கோடி ரூபாயை தொகுப்பாக பிரித்து கொடுக்க வேண்டும் என மணிப்பூர் மாணவர்கள் கேட்டனர். ஒரு மாநில அரசு, மற்றொரு மாநில அரசிற்கு செய்யும் உதவியை தனியாக பிரித்து கொடுக்க முடியாது. அந்த நிதியுதவி சரியான முறையில் சென்று சேருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். மணிப்பூரில் இருந்து தமிழகம் வந்துள்ளவர்களுக்கு மனிதாபிமான முறையில் வாழ்வாதாரத்திற்கான உதவிகள் செய்யப்படும் என அமைச்சர் மஸ்தான் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us