தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


UPDATED : ஆக 29, 2023 12:00 AM

ADDED : ஆக 29, 2023 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2023 12:00 AM ADDED : ஆக 29, 2023 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர்கள் சிலர் ஜாதி ரீதியாக மாணவிகளை துாண்டுவதாகக்கூறி 35க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், முதல்வர் அறை முன் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் 80க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். 2600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கவுரவ விரிவுரையாளர் அதியமான் மீது மாணவிகள் புகாரில், முதல்வர் மேகலா விசாரணை மேற்கொண்டு வருகிறார். மாணவி ஒருவர் பரமக்குடி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், பேராசிரியர் மீது வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து கல்லுாரி முதல்வர் அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில், அதியமான் வேறு கல்லுாரிக்கு மாற்றப்பட்டார். இப்பிரச்னை தொடர்பாக பேராசிரியர்கள் சிலர் ஜாதி ரீதியாக மாணவிகளை துாண்டுவதாகக்கூறி 35க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், முதல்வர் அறை முன் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னை தொடர்பாக சில அமைப்புகள் சார்பில் பரமக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து முதல்வர் மேகலா கூறுகையில், மாணவிகள் சிலர் கல்லுாரி புகார் பெட்டியில் பேராசிரியர் அதியமான் தொடர்பாக புகார் கடிதம் எழுதி போட்டுள்ளனர். இதன் மீது கல்லுாரி குழு விசாரணை செய்து வருகிறது. ஆனால் மாணவி போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் மேலதிகாரிகள் பேராசிரியரை பணி மாற்றம் செய்துள்ளனர். தற்போது பேராசிரியர் ஒருவர் மாணவிகளை துாண்டும் விதமாக, மற்ற பேராசிரியர்களை தொடர்பு படுத்தி அவதுாறாக பேசிய ஆடியோ பரவி வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us