UPDATED : ஆக 30, 2023 12:00 AM
ADDED : ஆக 30, 2023 05:23 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை சமூக நல அலுவலகத்தில் ஒரு இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கு ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் மாதம் தொகுப்பூதியமாக ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பதவிக்கு வயது வரம்பு 20 முதல் 35க்குள் இருப்பதுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ், ஆங்கிலம், மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கணினி பயன்பாடு அறிந்தவராக இருக்க வேண்டும்.விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர், சமூக நலம், மகளிர் உரிமை துறை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மதுரை. விண்ணப்பங்கள் வந்து சேர 2023 செப்.,7 கடைசி நாளாகும்.
