UPDATED : ஆக 30, 2023 12:00 AM
ADDED : ஆக 30, 2023 05:25 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிவகங்கை நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் தினை சிறுதானிய உணவு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். உணவுக் கண்காட்சியில் தினைலட்டு, வரகு பொங்கல், கேழ்வரகு இட்லி, சிவப்பரிசி கொழுக்கட்டை போன்றவற்றை மாணவர்கள் தயார் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆசிரியர்கள் சிவசீலா, ரேவதி, வீரசின்னம்மாள், ஆரோக்கியமேரி, முத்துலட்சுமி, சித்ரா, பாண்டியரசி ஆகியோர் கண்காட்சியினை ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.
