தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டில்லியில் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்

டில்லியில் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்

டில்லியில் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்


UPDATED : ஆக 30, 2023 12:00 AM

ADDED : ஆக 30, 2023 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2023 12:00 AM ADDED : ஆக 30, 2023 05:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ரக்ஷாபந்தனை கொண்டாடும் வகையில் டில்லியில் பள்ளி மாணவிகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள். இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு ராக்கி என்னும் கயிறு கட்டுவார்கள். டில்லி பெண்கள் பள்ளியில் நடந்த ரக்ஷாபந்தன் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, மாணவிகள் பிரதமர் நரேந்திர மோடியின் மணிக்கட்டில் ராக்கிகளைக் கட்டி விழாவைக் கொண்டாடினர்.சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத பந்தத்தை கொண்டாட ரக்ஷா பந்தன் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு மாணவிகள் ராக்கி கயிறு கட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.பிரதமர் மோடி வாழ்த்து
ரக்ஷாபந்த பந்தனுக்கு பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: 
எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையிலான உடைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அபரிமிதமான அன்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ரக்ஷாபந்தன் பண்டிகை, நமது கலாச்சாரத்தின் புனிதமான பிரதிபலிப்பாகும். அனைவரின் வாழ்விலும் பாசம், நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.ராணுவ வீரர்களுடன் கொண்டாட்டம்
ஜம்மு காஷ்மீரில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுடன் ரக்ஷாபந்தனை கொண்டாடிய பள்ளி மாணவிகள் வீரர்களுக்கு ராக்கி கட்டி இனிப்புகள் வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர்.ஜனாதிபதி வாழ்த்து
அன்பு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடான ரக்ஷாபந்தன் திருவிழா சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வளர்க்கட்டும். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமமான சூழலை உருவாக்க உறுதிமொழி எடுப்போம். என ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us