தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து அரசு பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம்: கலெக்டர் தகவல்

அனைத்து அரசு பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம்: கலெக்டர் தகவல்

அனைத்து அரசு பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம்: கலெக்டர் தகவல்


UPDATED : ஆக 31, 2023 12:00 AM

ADDED : ஆக 31, 2023 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2023 12:00 AM ADDED : ஆக 31, 2023 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
பள்ளி குழந்தைகளிடம் உரையாடல் துவங்கவும், இயல்பாக உரையாடவும், வாசிப்பின் ஊடாக சமூக சிந்தனையை வளர்த்து, உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் வாசிப்பு இயக்கத்தை, பள்ளி கல்வித்துறை நடத்துகிறது.ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் யூனியனில், 93 அரசு பள்ளிகளில், 13 கருத்தாளர்கள் வாசிப்பு இயக்கம் துவங்கி, 53 வகையான கதைப்புத்தகங்கள் வழங்கி, கடந்த ஜூலை முதல் நடைமுறைப்படுத்தி உள்ளனர். தினமும் இரு வகுப்புகளாக, ஒன்றரை மணி நேரம் வீதம் வாசிப்பு இயக்கம் நடத்துகின்றனர். விளையாட்டு, சுயவாசிப்பு, பின்னுாட்டம் என உள்ளடக்கத்துடன் செயல்படுத்துகின்றனர். சமவெளி மற்றும் மலைப்பகுதி மாணவர்களுக்குள் வாசிப்பு வேறுபாடுகள் பற்றியும், படைப்பு குழு மூலம் கதை உருவாக்கம் சார்ந்து ஆலோசனை நடத்துகின்றனர். மாதந்தோறும் வாசிப்பு இயக்க கருத்தாளர் கூட்டம் நடத்தி, அனுபவங்களை பகிர்ந்து, அடுத்த கட்ட செயல்பாட்டுக்கு கொண்டு செல்கின்றனர். இதை தொடர்ந்து அனைத்து அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் நடைமுறைப்படுத்த உள்ளனர். இத்தகவலை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us