அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
UPDATED : செப் 01, 2023 12:00 AM
ADDED : செப் 01, 2023 09:25 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ பார்வையிடுகிறார்.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலெக்டரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஆய்வு செய்தனர். பள்ளி உட்கட்டமைப்பு, தேவையான வசதிகள் குறித்து பள்ளி தலைமையாசிரியர் சிவபிரியா, முதுகலை ஆசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தனர். தேவையான வசதிகள் செய்து தரப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. அங்குள்ள, திறன் மேம்பாட்டு மையத்தை ஆய்வு செய்தனர். அதில், பள்ளியின் செயல்பாடு, மாணவர்களின் தனித்திறன்கள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
