தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவியர் எந்த படங்களை நண்பர்களிடம் பகிரலாம்?: எஸ்.பி., பேச்சு

மாணவியர் எந்த படங்களை நண்பர்களிடம் பகிரலாம்?: எஸ்.பி., பேச்சு

மாணவியர் எந்த படங்களை நண்பர்களிடம் பகிரலாம்?: எஸ்.பி., பேச்சு


UPDATED : செப் 01, 2023 12:00 AM

ADDED : செப் 01, 2023 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2023 12:00 AM ADDED : செப் 01, 2023 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மாவட்ட எஸ்.பி., தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு, தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது.கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன், மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு பிராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் வாயிலாக 1,300 பள்ளிகளில் 2,11,000 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட போலீசார், பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது, பள்ளி குழந்தைகள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில், பள்ளிக்கூடம் 2.0 என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார்.இதன் வாயிலாக, பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் யுக்திகளை, அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில், பள்ளி மாணவிகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி வகுப்பு, ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.பெண் பயிற்சியாளர்கள், கோவை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற நான்கு பெண் போலீசார், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி வகுப்பில் பிளஸ் 1, படிக்கும், 40 மாணவிகள் பங்கேற்றனர். இதுபோன்ற தற்காப்பு பயிற்சி வகுப்புகள், ஒவ்வொரு பள்ளியிலும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதனை யாரிடம் தெரிவிக்க வேண்டும், எவ்வாறு தெரிவிக்க வேண்டும்; அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று, எஸ்.பி.,பத்ரிநாராயணன் அறிவுரை வழங்கினார்.இந்நிகழ்ச்சி, பள்ளி மாணவிகளிடையே பெரிதும் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக மாணவிகளும், ஆசிரியர்களும் தெரிவித்தனர். பஸ் மற்றும் பொது இடங்களில், நாம் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச மாட்டோம். அதுபோன்று சமூக வலைதளங்களான, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசக்கூடாது. நம் குடும்பத்தினரிடம் எந்த போட்டோவை பகிர்வோமோ, அந்த போட்டோவைதான் நண்பர்களிடமும் பகிர வேண்டும் என மாவட்ட எஸ்.பி.,  பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us