தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச எல்.கே.ஜி., திட்டத்தில் கோவையில் 346 பள்ளிகள் பயன்

இலவச எல்.கே.ஜி., திட்டத்தில் கோவையில் 346 பள்ளிகள் பயன்

இலவச எல்.கே.ஜி., திட்டத்தில் கோவையில் 346 பள்ளிகள் பயன்


UPDATED : செப் 01, 2023 12:00 AM

ADDED : செப் 01, 2023 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2023 12:00 AM ADDED : செப் 01, 2023 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்டத்தில், ஆர்.டி.இ., திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்திய, 346 பள்ளிகளுக்கும், இரு கல்வியாண்டுகளுக்கான தொகை விரைவில் வழங்கப்படவுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி (ஆர்.டி.இ.,), பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணமின்றி படிக்கலாம். இதற்கு, பள்ளியில் ஆரம்ப வகுப்பு எதுவோ, அதில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்கு கோவையில், 15 ஒன்றியங்களில், 346 சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், 9 ஆயிரத்து 320 இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.இப்பள்ளிகளுக்கு கடந்தாண்டு மற்றும் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டண தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, திட்டத்தில் சேர்க்கை நடத்திய பள்ளிகள், ஆரம்ப அனுமதி பெற்று துவங்கியிருப்பதோடு, உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பெல்ராஜ் கூறுகையில், கோவை மாவட்டத்தில், ஆர்.டி.இ., திட்டத்தின் கீழ், சேர்க்கை நடத்திய அனைத்து பள்ளிகளும் தகுதி பெற்றுள்ளன. இப்பள்ளிகளுக்கு அரசு கல்வி கட்டணம் வழங்குவதில் தடையில்லை என இயக்குனரகத்திற்கு தெரிவிக்கப்பட்டதால் விரைவில் கட்டணத்தொகை உரிய பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us