தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக் கல்வி செயலருக்கு வாரன்ட்

பள்ளிக் கல்வி செயலருக்கு வாரன்ட்

பள்ளிக் கல்வி செயலருக்கு வாரன்ட்


UPDATED : செப் 01, 2023 12:00 AM

ADDED : செப் 01, 2023 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2023 12:00 AM ADDED : செப் 01, 2023 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமாருக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவர்களை ஆஜர்படுத்த சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அரசுப் பள்ளியில் துாய்மைப் பணியாளராக 1998 ல் சின்னத்தாய் என்பவர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டார். அவர் தனது பணியை வரன்முறைப்படுத்தி அதற்குரிய பணப் பலன்களை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும், என 2013 ல் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். தனி நீதிபதி, மனுதாரரின் பணியை வரன்முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும் என 2016 ல் உத்தரவிட்டார். பின் சின்னத்தாய் இறந்தார். அவரது கணவர் பரமன், தனி நீதிபதியின் உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார், திருநெல்வேலி கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.ஜூலையில் நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார்.அரசு தரப்பு:
தனி நீதிபதியின் உத்தரவு சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டதுநீதிபதி:
தாமதமாக நிறைவேற்றியது ஏன் என்பதற்கு காகர்லா உஷா, நந்தகுமார், வசந்தா ஆக.,31 ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். நேற்று நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். வசந்தா ஆஜரானார். காகர்லா உஷா, நந்தகுமார் தரப்பில்,அமைச்சர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியுள்ளது. ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும், என மனு செய்யப்பட்டது.இதை தள்ளுபடி செய்த நீதிபதி அளித்த உத்தரவு:
இருவரையும் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. இருவரையும் செப்.,11 ல் ஆஜர்படுத்த சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us