தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இன்று துவக்கம்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இன்று துவக்கம்

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இன்று துவக்கம்


UPDATED : செப் 01, 2023 12:00 AM

ADDED : செப் 01, 2023 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2023 12:00 AM ADDED : செப் 01, 2023 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளிசெல்லாத 4.80 லட்சம் பேருக்கு அடிப்படை கல்வி கற்றுத்தர புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் இன்று(செப்.,1) ல் துவங்குகிறது.15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லாத ஆண்கள் 1.58 லட்சம் பேர், பெண்கள் 3.21லட்சம் பேர், திருநங்கைகள் 134 பேர் என 4.80லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தினமும் 2 மணி நேரம் கற்றல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இத்திட்டதிற்கு தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களுக்கு வட்டார கல்வி அலுவலகங்களில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.வயது வந்தோரை பள்ளிக்கு வரவழைத்து மட்டும் பயிற்சி அளிக்காமல், பணி புரியும் இடங்கள், குடியிருப்பு பகுதியிலும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள், சி.இ.ஓ.,க்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மாதந்தோறும் இயக்குனருக்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us