தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி


UPDATED : ஜன 16, 2010 12:00 AM

ADDED : ஜன 16, 2010 03:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2010 12:00 AM ADDED : ஜன 16, 2010 03:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தூத்துக்குடி: செயல்வழிக்கற்றல் முறைகளை வலுவூட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி நடந்தது.


தூத்துக்குடி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல்வழிக்கற்றல் நிகழ்வுகளை மேலும் வலுவூட்டும் வகையில், செயல்வழிக்கற்றல் அட்டைகளில் உள்ள பக்கவாட்டு ஏணிப்படிகளில் காணப்படும் பாடம் தொடர்பான கதை, பாட்டு, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற செயல்பாடுகளை விளக்கும் பொம்பலாட்ட பயிற்சி நடந்தது.


தூத்துக்குடி சி.வ. அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அதிகாரி அமிர்தராஜ் ஜெயகரன் துவக்கி வைத்தார். உதவி திட்ட அதிகாரி முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் மொத்தம் 160 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் 23ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் மாணவ, மாணவிகளின் நடிப்பு, பேச்சு, பாடல் மற்றும் கதை வாசித்தல் திறன்கள் வலுவூட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us