தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆண்டுக்கு லட்சம் டாக்டர்கள் ஆனாலும் தேவை அதிகம்!

ஆண்டுக்கு லட்சம் டாக்டர்கள் ஆனாலும் தேவை அதிகம்!

ஆண்டுக்கு லட்சம் டாக்டர்கள் ஆனாலும் தேவை அதிகம்!


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 09:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 09:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு லட்சம் டாக்டர்கள் வெளியே வருகின்றனர். இருந்தாலும் டாக்டர்கள் தேவை அதிகரித்தபடியே உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.இந்தியாவில், 2014ம் ஆண்டில், 387 மருத்துவக்கல்லுாரிகள் இருந்தன. ஆண்டுக்கு 31,000 டாக்டர்கள் உருவாகினர். தற்போது 600மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. தற்போதைய சூழலில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாக்டர்கள் வெளியே வருகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி 1,000 மக்களுக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும். தற்போது 1,700 மக்களுக்கு ஒரு டாக்டர் உள்ளனர். இதனால் இந்தியாவில் டாக்டர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.முதலாம் ஆண்டு முடிக்கும் போதே மருத்துவத்தில் என்னவாக போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுத்து அதன்படி செயலாற்றுங்கள். தலைசிறந்த மருத்துவக் கல்லுாரியில் படிக்க சேர்ந்துள்ளீர்கள். மக்களின் வரிப்பணத்தில் மிக குறைந்த கட்டணத்தில் படிக்க உள்ளீர்கள். எனவே டாக்டராக வந்த பின் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us