மாநில கல்வி கொள்கைக்கு கவர்னர் ஒப்புதல் பெற முடிவு
மாநில கல்வி கொள்கைக்கு கவர்னர் ஒப்புதல் பெற முடிவு
UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 10:03 AM
அவர் அளித்த பேட்டி:
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், நாங்கள் மாணவர்களின் பக்கம் இருக்கிறோம்; தொடர்ந்து போராடுவோம். நீட் தேர்வு விலக்குக்காக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கே, போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, மாநில கல்விக் கொள்கையை அரசிடம் சமர்ப்பித்த பின், அந்த கொள்கை, கவர்னரின் ஒப்புதல் பெற அனுப்பப்படும்.ஒப்புதல் அளிக்க, அவர் தாமதம் செய்தால், உரிய முடிவுகளை முதல்வர் மேற்கொள்வார். ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை தயார் செய்துள்ளோம். விரைவில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சந்திரயான் -3 விண்கலம் எப்படி உருவாக்கப்பட்டது; அதில், முக்கிய பங்காற்றியவர்கள் யார் என்ற விபரங்கள், பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும்.நிலவுக்கு சந்திரயான் ஏவப்பட்டது முதல், அதன் செயல்பாடு வரையிலான நிகழ்வுகள், கட்டுரையாக சேர்க்கப்படும். இதுகுறித்து வரும் 11ம் தேதி பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் நடக்கும் கூட்டத்தில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
