பி.எட்., மாணவர்கள் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்ப பதிவு
பி.எட்., மாணவர்கள் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்ப பதிவு
UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 10:08 AM
கோவை:
மாநிலத்திலுள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் ( பி.எட்.,) பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இன்று முதல் பதிவு செய்யலாம் என கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கீதா தெரிவித்தார்.தமிழகத்தில், 7 அரசு, 14 அரசு உதவிபெறும் உட்பட, 21 கல்வியியல் கல்லுாரிகளுக்கான சேர்க்கை செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணமாக, 500 ரூபாயும், எஸ்.சி., -- எஸ்.டி., விண்ணப்பதாரர்கள், 250 ரூபாய் செலுத்த வேண்டும். விருப்பத்தின் படி, கல்லுாரி, பாடவரிசையை மாணவர்கள் தேர்வு செய்யவேண்டியது அவசியம். எந்த கல்லுாரியில் என்னென்ன பாடங்கள் உள்ளன, சேர்க்கை எண்ணிக்கை குறித்த தகவல்களை, www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.விண்ணப்ப கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யு.பி.ஐ., வாயிலாக செலுத்தலாம். இணையவழியாக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்களில், வங்கி வரைவோலையாக நேரடி செலுத்தலாம். மேலும், முழுமையான தகவல்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கீதா கூறுகையில், அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., பிரிவின் கீழ், 2,040 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு செயல்பாடுகள் துவங்கியுள்ளன. செப்., 1 முதல், வரும் 11ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். சந்தேகம் இருப்பின், 93634-62070/93634 - 62007 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
