சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் மணிமேகலை பிரசுர நுால்கள்
சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் மணிமேகலை பிரசுர நுால்கள்
UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 10:16 AM
சென்னை:
சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில், மணிமேகலை பிரசுரம், புத்தக விற்பனை மற்றும் கண்காட்சியை நடத்த உள்ளது.தமிழகத்தின் பிரபல பதிப்பகமான மணிமேகலை பிரசுரம், ஆண்டு தோறும் பல்வேறு தலைப்புகளில், அதிக அளவிலான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அதனால், வெளிநாட்டு வாசகர்களிடம், இந்த பதிப்பக நுால்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்கும், இந்த பிரசுரம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது.இந்நிலையில் எழுத்தாளர்களும், வாசகர்களும் பயனடையும் வகையில், சிங்கப்பூரில் நாளை முதல், வரும், 5ம் தேதி வரையும்; வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், புத்தக விற்பனை கண்காட்சியை நடத்த உள்ளது.அதேபோல், ஆஸ்தி ரேலியாவின் மெல்போர்ன் நகரில், வரும் 8ம் தேதியும், பிரிஸ்பேன் நகரில் 9ம் தேதியும், சிட்னி நகரில், 15, 16, 17ம் தேதிகளிலும் விற்பனை கண்காட்சியை நடத்த உள்ளது. மேலும் தகவல்களை அறிய, மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணனை, சிங்கப்பூரில், 0065 - 8549 5547 என்ற மொபைல் போன் எண்ணிலும்; ஆஸ்திரேலியாவில் 0001 - 434 723 855 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
