தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

ஐ.ஐ.டி., அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

ஐ.ஐ.டி., அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆராய்ச்சி பூங்கா அமைப்பது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை நடத்தினார்.சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த ஜனவரி மாதம் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் அனைத்து உறுப்பினர்களின் சமமான பங்குடன் ஐ.ஐ.டி., மூலம் ஆராய்ச்சி பூங்கா நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்காவை சர்வதேச நகரமான ஆரோவில் அருகே அமைத்தால் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தங்கி செல்ல வசதியாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து முதல்வர் ரங்கசாமி உத்தரவின்படி, அமைச்சர் லட்சுமி நாராயணன், தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு, தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகளுடன் முதல்கட்ட பேச்சு நடத்தினர். வரும் 2026-க்குள் அமைய திட்டமிட்டுள்ள சர்வதேச தொழில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க 100 ஏக்கர் நிலம் தேவை என சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.புதுச்சேரி கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த ஆராய்ச்சி பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆராய்ச்சி பூங்காவில் உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனரங்கம், ஆராய்ச்சி யாளர்கள் தங்கள் நிறு வனத்தை அமைப்பர் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் அமைப்பதன் மூலம் புதுச்சேரியில் பொருளாதார வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us