UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 12:59 PM
அ நிறம் | அளவு
சென்னை:
கடந்த ஆண்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து, துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, விடைத்தாளில் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.இதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 4ம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ரிசல்ட் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, திருத்திய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். அசல் மதிப்பெண் வழங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
