தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உக்ரைனில் போரில் முடங்கிய பள்ளிகள் மீண்டும் திறப்பு: ஜெலன்ஸ்கி தகவல்

உக்ரைனில் போரில் முடங்கிய பள்ளிகள் மீண்டும் திறப்பு: ஜெலன்ஸ்கி தகவல்

உக்ரைனில் போரில் முடங்கிய பள்ளிகள் மீண்டும் திறப்பு: ஜெலன்ஸ்கி தகவல்


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 01:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 01:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீவ்:
உக்ரைன்-ரஷ்யா இடையே ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், தங்கள் மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் துவங்கியதாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை எதிர்கொண்டு வருகிறது. போரின் காரணமாக, உக்ரைனில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. மாணவர்கள் தங்களின் கல்வியை ஆன்லைன் மூலமாக தங்கள் வீட்டியில் இருந்தே கற்று வந்தனர். இந்நிலையில், தங்கள் மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டைத் துவங்கியதாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது: 
போர் இருந்தபோதிலும், உக்ரைனில் பள்ளி மாணவர்கள் இன்று புதிய பள்ளி ஆண்டைத் துவங்கினர். வெற்றிகரமான ஆண்டுக்கு அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாடு முழுவதும் பாதுகாப்பை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நேர்மையாகவும், உறுதியாகவும் இருப்பவர்களுக்கும், மற்றவர்களின் உதவியைப் பெறுபவர்களுக்கும் மிகப்பெரிய கனவுகள் கூட நனவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us