UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 05:03 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரையில் தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழக செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்தது.செயலாளர் சந்திரன் வரவேற்றார். இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முன்னாள் அகில இந்திய செயலாளர் சுரேஷ் தீர்மானங்களை விளக்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் நிரப்ப வேண்டும். தலைமையாசிரியர்களுக்கு தனிப்பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும். சத்துணவுத்திட்டத்தினை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.
