UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 05:09 PM
சென்னை:
ஜி - 20 மாநாடு நடைபெற உள்ளதால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்ற உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின், டி.எம்., எம்.சி.ஹெச்., டி.என்.பி., உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதிக்கான, நீட் எஸ்.எஸ்., என்ற நுழைவுத் தேர்வு உண்டு. இந்தாண்டுக்கான நீட் தேர்வு வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், உயர் சிறப்பு படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப் பட்ட அறிவிக்கை:
டில்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் ஜி - 20 மாநாடு நடைபெற உள்ளது. இதனால், டில்லியில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை கருதி, நீட் உயர் சிறப்பு மருத்துவ தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. நாடு முழுதும், தேர்வு நடைபெறும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
