சான்றிதழில் ஆதார் எண் கூடாது: பல்கலைக்கழக மான்யக்குழு அறிவிப்பு
சான்றிதழில் ஆதார் எண் கூடாது: பல்கலைக்கழக மான்யக்குழு அறிவிப்பு
UPDATED : செப் 03, 2023 12:00 AM
ADDED : செப் 03, 2023 10:30 AM
அ நிறம் | அளவு
ஆட்சேர்ப்பின் போது ஆவண சரிபார்ப்புக்கு வசதியாக, பல்கலைகளால் வழங்கப்படும் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பட்டங்களில், முழு ஆதார் எண்களை அச்சிடுவது குறித்து, மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக, செய்தி வெளியானது. இந்நிலையில் யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி, அனைத்து பல்கலைகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில், மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைகளுக்கு அனுமதி இல்லை. ஆதார் விதிகள், ஒழுங்குமுறைகளை, உயர்கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
