தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்வெளி துறையை மோடி சிறப்பாக வழி நடத்துகிறார்

விண்வெளி துறையை மோடி சிறப்பாக வழி நடத்துகிறார்

விண்வெளி துறையை மோடி சிறப்பாக வழி நடத்துகிறார்


UPDATED : செப் 03, 2023 12:00 AM

ADDED : செப் 03, 2023 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2023 12:00 AM ADDED : செப் 03, 2023 01:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இந்திய விண்வெளி துறையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்தார்.சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டு அறையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று விஞ்ஞானிகளிடம் பேசியதாவது:
ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக சரியான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதற்காக, சக விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். விண்கலம் பூமியை சுற்றி தொடர்ந்து பயணிக்கும். பின் அடுத்தடுத்த நிலைகளில் அதன் சுற்று வட்டப் பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு, 125 நாட்கள் பயணித்து லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 நிலையில் நிறுத்தப்படும்.சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது மற்றும் வெற்றிகரமாக ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதால், இஸ்ரோ பெருமை கொள்கிறது.சந்திரயான் - 3 வாயிலாக நிலவில் தரையிறங்கிய லேண்டர் மற்றும் ரோவர் சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. லேண்டரில் இருந்து பிரிந்து சென்ற ரோவர், 100 மீட்டர் துாரம் வரை பயணித்து ஆய்வு செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
இந்த தருணத்தை ஏற்படுத்தி கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. பல ஆண்டுகளாக இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பால் இஸ்ரோ இந்தளவுக்கு முன்னேறியுள்ளது. இந்த நாளை, இந்திய மக்களால் மறக்க முடியாது. அடுத்த, 25 ஆண்டுகளுக்கு பின் நம் நாடு, 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, 140 கோடி இந்தியர்கள் மேலும் பெருமை அடைவர். பிரதமர் மோடி கூறியது போல், வானம் நம் எல்லை என்ற நிலை மாறி விண்ணையும் தாண்டி, இந்திய விண்வெளி துறை பல சாதனைகளை படைத்து வருகிறது. இஸ்ரோவின் அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.இந்திய விண்வெளி துறையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இது, இந்தியாவுக்கான பிரகாசமான காலம். ஆதித்யா - 1 விண்கலத்தை வெற்றி அடைய செய்த இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிஹர் ஷாஜி பேசியதாவது:
ஆதித்யா விண்கலம், 125 நாட்கள் பயணத்தை துவங்கியுள்ளது. இறுதியாக, சூரியன் மற்றும் பூமி ஆகிய கோள்களின் ஈர்ப்பு விசைகள், சமநிலையில் இருக்கக்கூடிய இடத்தில் நிலை நிறுத்தப்படும். கனவுகள் மெய்ப்பட்ட தருணமே ஆதித்யா விண்கலத்தின் வெற்றி. இந்த வெற்றியால், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் எப்போதும் போல் தோல்வி இல்லாத வெற்றியை கண்டு வருகிறது. இஸ்ரோவின் வல்லுனர் குழுவுக்கு நன்றி. ஆதித்யா வெற்றி பெருமையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பெருமை சேர்க்கும் தமிழர்கள்
நிலவை ஆய்வு செய்ய, இஸ்ரோ முதல்முறையாக அனுப்பிய சந்திரயான் - 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். சந்திரயான் - 2 திட்ட இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா இருந்தார். சமீபத்தில் நிலவில் தரையிறங்கிய சந்திரயான் - 3 திட்ட இயக்குனராக, விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் உள்ளார். சூரியனை ஆய்வு செய்ய நேற்று விண்ணில் நிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குனரான நிஹர் ஷாஜியும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ந்து, இஸ்ரோவின் மிக முக்கிய திட்டங்களுக்கு தலைமை ஏற்று, வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் தமிழக விஞ்ஞானிகள், நம் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us