தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் மொழி கற்றல்: அண்ணாமலை பல்கலை பதிவாளர் அட்வைஸ்

தமிழ் மொழி கற்றல்: அண்ணாமலை பல்கலை பதிவாளர் அட்வைஸ்

தமிழ் மொழி கற்றல்: அண்ணாமலை பல்கலை பதிவாளர் அட்வைஸ்


UPDATED : செப் 03, 2023 12:00 AM

ADDED : செப் 03, 2023 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2023 12:00 AM ADDED : செப் 03, 2023 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
தமிழ் மொழியை மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என அண்ணாமலை பல்கலை., பதிவாளர் சிங்காரவேலு பேசினார்.ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அறிவியல் தொழில்நுட்பங்கள் மற்ற இதர தொழில்நுட்பங்களை வெளிக்கொணர்வதில் நாளிதழ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கல்வியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது. உலக அளவில் தமிழர்கள் பெரிய பொறுப்புகளை அடைந்துள்ளனர். தற்போது விண்ணில் பாய்ந்த சந்திரயான்- 3 விண்கலத்தில் பணிபுரிந்த விஞ்ஞானிகள் பரமசிவம், சிவா, ரவி ஆகியோர் அண்ணாமலை பல்கலையில் படித்தவர்கள்.மாணவர்களிடம் கல்வி அறிவை கொண்டு சேர்ப்பதில் தினமலர் நாளிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளி பருவம் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் முக்கியமான பருவம். நானும் அரசு பள்ளியில் தான் படித்தேன். இந்த பள்ளி பருவத்தில்தான் நீங்கள் என்ன ஆக வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். தமிழ் மொழியை நன்றாக படிக்க வேண்டும். ஆங்கிலம் என்பது ஒரு மொழி அவ்வளவுதான். இந்தியாவில் மூன்றாவது பல்கலைக் கழகமாக அண்ணாமலை பல்கலை, தமிழரால் துவங்கப்பட்டது. மற்ற இரண்டு பல்கலைகழகங்கள் ஆங்கிலேயரால் துவங்கப்பட்டது. பள்ளி பருவத்தில் நன்றாக படிக்க வேண்டும். நான் இன்ஜி., படிக்க முயற்சித்தேன் ஆனால் கிடைக்கவில்லை. மருத்துவம் மட்டும் படிப்பு இல்லை. நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் நன்றாக படிக்க வேண்டும். இந்த போட்டி உலகத்தில் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பொது அறிவை வளர்த்துக்கொண்டால், கூர்மையான சிந்தனை, முடிவெடுக்கும் திறன் வளரும். ஒரு பட்டம் உயர பறக்க நுால் தேவை. அதேபோல் ஒரு மாணவன் உயர்ந்த நிலைக்கு செல்ல நுால், நாளிதழ்கள் தேவை. கல்வி மட்டும் தான் ஒருவரை முன்னேற்ற முடியும். கல்வி மட்டும்தான் சாதி, மத வேறுபாடுகளை தவிர்த்து சமத்துவமாக இருக்க உதவும். எந்த பாடமாக இருந்தாலும் அதனை தாய்மொழி தமிழில் புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.&'தினமலர் பட்டம்&' இதழில் அறிவியல், விஞ்ஞானம் சார்ந்த செய்திகள் படிக்க கூடிய வகையில் உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பட்டம் இதழை படியுங்கள்.மாணவர்கள் ஒரு இலக்கை வைத்துக்கொண்டு படிக்க வேண்டும். தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று புள்ளி விபரங்கள் சொல்கிறது. புத்தகத்தை படிக்க படிக்க மாணவர்களின் அறிவுத்திறன் வளரும். ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை அப்படியே படியுங்கள். மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். ஒழுக்கம், கல்வி இருந்தால்தான் ஒரு நாடு முன்னேறும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us