தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 54,676 இடங்கள் காலி!

இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 54,676 இடங்கள் காலி!

இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 54,676 இடங்கள் காலி!


UPDATED : செப் 04, 2023 12:00 AM

ADDED : செப் 04, 2023 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2023 12:00 AM ADDED : செப் 04, 2023 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த கவுன்சிலிங், ஜூலை 22ல் துவங்கியது. மூன்று சுற்று கவுன்சிலிங் நேற்றுடன் முடிந்தது. இதில், அரசு பள்ளி மாணவர் பிரிவில், 11,058 பேர்; மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவுகளில், 95,046 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 6,104 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து, 60,780 இடங்களில், 54,676 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 12,533 பேர் அதிகமாக ஒதுக்கீடு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 59.90 சதவீத இடங்கள் நிரம்பிய நிலையில் இந்த ஆண்டு 65.08 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் எட்டப்படாத சதவிதம் ஆகும். 68 கல்லூரிகளில் 95 சதவீத இடங்களும், 104 கல்லூரிகளில் 90 சதவீதத்திற்கு மேல் இடங்களும், 186 கல்லுரிகளில் 80 சதவீத இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 61 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. 37 கல்லூரிகளில் 10 இடங்கள் கூட நிரம்பவில்லை. மேலும் திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் கூட நிரம்பவில்லை.இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், பெரும்பாலான மாணவர்கள், கணினி அறிவியல், ஐ.டி., ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், இ.சி.இ., போன்ற படிப்புகளை தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவை, குறைந்த மாணவர்களே தேர்வு செய்துள்ளனர். மொத்தம், 12 கல்லுாரிகளில், 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 68 கல்லுாரிகளில், 95 சதவீதத்துக்கு அதிகமான இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 11 கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 10 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பியுள்ள கல்லூரிகளை ஆய்வு செய்ய அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us