UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 10:26 AM
ஈரோடு:
ஒருங்கிணைந்த சேவை மையத்தின் ஒன் ஸ்டாப் சென்டரில் பணியாற்ற விண்ணப்பிக்குமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
சமூக நலத்துறை சேவை மையமான ஒன் ஸ்டாப் சென்டரில் பணி செய்ய, ஈரோடு மாவட்ட இணைய தளமான www.erode.nic.in ல் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதி குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 15 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தகவல் தொழில் நுட்ப பணியாளர் பணிக்கு, கணினி அறிவியல் அல்லது கணினி பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாதம் 18,000 ரூபாய் சம்பளம்.வழக்கு பணியாளர் பணிக்கு சமூக பணி சார்ந்த பட்டம், உளவியலில் பட்டம் பெற்றவராக இருக்கலாம். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் 15,000 ரூபாய் சம்பளம். பல்நோக்கு உதவியாளர் பணிக்கு, எழுத படிக்க தெரிந்தால் போதும். நன்கு சமைக்க தெரிந்தவராக, மையத்தை பராமரிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.பெருந்துறை மற்றும் ஈரோடு பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். மாதம், 6,400 ரூபாய் சம்பளம். கூடுதல் விபரத்துக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆறாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
