தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லுாரி அங்கீகாரம் போலி கடிதங்களை தடுக்க நடவடிக்கை

மருத்துவ கல்லுாரி அங்கீகாரம் போலி கடிதங்களை தடுக்க நடவடிக்கை

மருத்துவ கல்லுாரி அங்கீகாரம் போலி கடிதங்களை தடுக்க நடவடிக்கை


UPDATED : செப் 06, 2023 12:00 AM

ADDED : செப் 06, 2023 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2023 12:00 AM ADDED : செப் 06, 2023 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருத்துவ கல்லுாரிகளுக்கு மருத்துவ அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வரும் போலி கடிதங்களை தடுக்க டிஜிட்டல் கையெழுத்து வாயிலாக தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய மருத்துவ கல்லுாரிகள் துவக்குவது பழைய மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை நீட்டிப்பது மருத்துவ கல்லுாரிகளில் இடங்களை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை என்.எம்.சி. எனும் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக என்.எம்.சி மருத்துவ அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு வாரியம் பெயரில் தகவல்கள் வெளியாயின. அதை என்.எம்.சி. மறுத்தது.என்.எம்.சி. சட்டம், ஊழல் தடுப்பு வாரிய செயலர் விபுல் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பு: போலி கடிதங்களை தடுப்பதற்காக என்.எம்.சி. தரப்பில் இனி வெளியிடப்படும் அனைத்து ஆவணங்களிலும் டிஜிட்டல் கையெழுத்து இடம் பெற்றிருக்கும். அவ்வாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் டிஜிட்டல் கையெழுத்து இல்லாத கடிதங்களை மருத்துவ கல்லுாரி நிர்வாகிகளோ முதல்வர்களோ மாணவர்களோ நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us