UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 06:22 PM
விருதுநகர்:
பிளஸ் டூ முடித்த ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்கள் பி.எஸ்.சி., ஹாஸ்பிடாலிட்டி, ஓட்டல் நிர்வாகம் படிப்பு படிக்கலாம்.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர், வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.சென்னை தரமணி இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் பிளஸ் டூ முடித்த ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்கள் பி.எஸ்.சி., ஹாஸ்பிடாலிட்டி, ஓட்டல் நிர்வாகம் படிப்பு படிக்கலாம். 10ம் வகுப்பு முடித்தவர்கள் உணவு தயாரிப்பு, பதனிடுதல், ஹவுஸ் கீப்பிங், உணவு சேவை ஆகிய படிப்புகளில் டிப்ளமோ படிக்கலாம். படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம், கப்பல், சேவை நிறுவனங்கள், உயர்தர ஓட்டல்களில் வேலை வாய்ப்பு பெற்றுதரப்படும். தகுதியாக மாணவர்கள் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். www.tahdco.com என்ற முகவரியில் பதிவுசெய்து பயன்பெறலாம், என்றார்.
