UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 06:27 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:
தேவகோட்டை வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் வானவில் மன்றத்தின் சார்பில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு அறிவியல் கண்காட்சி போட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜதுரை தலைமையில் கான்சோவில் இயக்குனர் சிரில் கண்காட்சியை துவக்கி வைத்தார். 30 பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ மாணவியர் அறிவியல் கண்காட்சி, விழிப்புணர்வு நாடகப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் லட்சுமிதேவி, மாலதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் பார்வையிட்டனர்.
