தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/12 மாவட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது இல்லை

12 மாவட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது இல்லை

12 மாவட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது இல்லை


UPDATED : செப் 07, 2023 12:00 AM

ADDED : செப் 07, 2023 09:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2023 12:00 AM ADDED : செப் 07, 2023 09:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நல்லாசிரியர் விருது அறிவிப்பில் திண்டுக்கல், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில் ஒருவர் கூட இடம் பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் ராதாகிருஷ்ணன் விருதுக்கு மெட்ரிக், பட்டதாரி, முதுகலை, தலைமை ஆசிரியர்கள், ஆரம்ப, நடுநிலை, தொடக்கப்பள்ளி என பல்வேறு பிரிவுகளாக 386 பேர் தேர்வ செய்யப்பட்டுள்ளனர்.இதில் திண்டுக்கல், விருதுநகர் , திருவள்ளூர், தர்மபுரி, அரியலுார், சிவகங்கை, கன்னியாகுமரி, கடலுார், கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை உட்பட 12 மாவட்டங்களில் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்ததற்கு காரணமாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முறையாக அங்கீரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்றது திண்டுக்கல் மாணவி. மாநில அளவில் முதலிடம் பிடித்தது விருதுநகர் மாவட்டம். இதில் முக்கிய பங்காற்றிய அனைவருமே முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தான். ஆனால் விருது அறிவிப்பில் இம்மாவட்டங்கள் இல்லை. நீண்ட காலமாகவே இப்பிரச்னை இருப்பதாக பட்டதாரி ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us