UPDATED : செப் 07, 2023 12:00 AM
ADDED : செப் 07, 2023 12:08 PM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம், ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்புகள்:
பிஎச்.டி., எம்.எஸ்., -ரிசர்ச்எம்.எஸ்., + பிஎச்.டி.,
தகுதிகள்:
முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்தவர்கள் மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். உரிய தகுதி பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரும் விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத்தொகை:
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.31 ஆயிரம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
cfr.annauniv.edu எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 23
விபரங்களுக்கு:
www.annauniv.edu
