UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 09:34 AM
சென்னை:
திருவான்மியூர், கலாஷேத்ரா சாலையில் நடந்து வரும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.தென்னிந்திய நெசவாளர்கள், கைவினைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தும் வகையிலும், உள்நாட்டு பொருட்களை வாங்கி, நம் நாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், கிராவிட்டி எனும் அமைப்பு சார்பில், ஆங்காங்கே கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக சென்னை, திருவான்மியூர், கலாஷேத்ரா சாலை, சி.இ.ஆர்.சி., வளாக கண்காட்சி மைதானத்தில் கைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சியை நடத்தி வருகிறது. இதில் காஞ்சி, கர்நாடகா பட்டு, ஜார்ஜெட், கலம்காரி, போச்சம்பள்ளி, மங்களகிரி புடவைகள், துணி வகைகள், கைத்தறி ஆடைகள், குர்தீஸ், பிளாக் பிரின்ட் சேலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.மேலும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கிராமிய கலை நயமிக்க கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. வரும் 10ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சிக்கு, தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
