UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 10:21 AM
நிலவை ஆய்வு செய்ய, சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றி கரமாக அனுப்பியது. நிலவில் தரையிறங்கி சோதனை செய்து வரலாறு படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா எல்1 விண்கலம், கடந்த, 2ம் தேதி அனுப்பப்பட்டது.இது, பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட, ஈர்ப்பு விசை சமமாக உள்ள எல்1 என்ற பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள இந்தப் பகுதிக்கு செல்வதற்கு, விண்கலம், 125 நாட்கள் பயணம் செய்ய வேண்டிஉள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்கு செல்லும் வழியில், செல்பி எனப்படும் தன்னைத் தானே படம் எடுத்து, ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிஉள்ளது.இதைத் தவிர, பூமி மற்றும் நிலவு இருக்கும் படத்தையும் அனுப்பி உள்ளது.
