UPDATED : செப் 10, 2023 12:00 AM
ADDED : செப் 10, 2023 09:05 AM
தேனி:
தேனி வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய நிர்வாகிகள் தேர்வு அரண்மனைப்புதுாரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் ஆணையாளராக சிவராஜ் நியமிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி வட்டார தலைவராக ராஜ்வேல், செயலாளர் சவுந்தர்யபாண்டியன், பொருளாளர் கலைச்செல்வி, துணைத் தலைவர்களாக சுதாமதி, விஜயலட்சுமி, துணைச் செயலாளர்களாக எஸ்.எம்.சாந்தி, பி.சாந்தி, செந்தில்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, முருகானந்தம், ராம்குமார், கவுசல்யா, செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, சுதா, நிறைமதி, அம்சவேணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் பதவி காலம் 2023 -2026 வரை மூன்று ஆண்டுகளாகும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
