UPDATED : செப் 10, 2023 12:00 AM
ADDED : செப் 10, 2023 09:18 AM
கோவை:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும், 18ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக மக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இதேபோல சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியையும் நாடு கொண்டாடி வருகிறது.இந்த இரண்டையும் போற்றும் வகையில், கோவை குனியமுத்துாரை சேர்ந்த ராஜா, விநாயகர் சிலை, சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்ற வடிவத்தை தயாரித்துள்ளார். தங்க நகை தொழிலாளியான இவர், வித்தியாசமான ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு பொருட்களை தயாரித்து வருகிறார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, இவர் சீத்தாப்பழத்தில் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களைக் கொண்டு, தேச தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓவியங்களை வரைந்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது.காலத்துக்கு ஏற்ற இவரது லேட்டஸ்ட் விநாயகர், சமூக வலைதளங்களில் ஏராளமான லைக்குகளை அள்ளி வருகிறார்.
