தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எங்கள் பள்ளி; மிளிரும் பள்ளி கோவையில் திட்டம் துவக்கம்

எங்கள் பள்ளி; மிளிரும் பள்ளி கோவையில் திட்டம் துவக்கம்

எங்கள் பள்ளி; மிளிரும் பள்ளி கோவையில் திட்டம் துவக்கம்


UPDATED : செப் 10, 2023 12:00 AM

ADDED : செப் 10, 2023 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2023 12:00 AM ADDED : செப் 10, 2023 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழாவில், கலெக்டர் பேசியதாவது:
அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டு, பல்வேறு முக்கிய திட்டங்களை, பள்ளி கல்வித்துறை மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பான குடிநீர், அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரமான கழிப்பறை, வளாகத்தை துாய்மையாக பராமரிப்பதை உறுதி செய்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய, எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் தனிப்பட்ட சுகாதாரம், பசுமையை அதிகப்படுத்துதல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கழிவு மேலாண்மை நடைமுறை, பள்ளியில் காய்கறி தோட்டம், மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் இல்லாத வளாகம் உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வகுப்பறையை சுத்தமாக வைத்திருப்பது மாணவர்களின் கடமை. சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக மரக்கன்றுகளை நட்டு, தொடர்ந்து பராமரிக்க வேண்டும். வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரக்கூடிய மாசுபாட்டை, மரங்களால் மட்டுமே சரி செய்ய முடியம். எனவே, அதிகமான மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க வேண்டும். சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.விழாவில், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us