UPDATED : செப் 11, 2023 12:00 AM
ADDED : செப் 11, 2023 09:23 AM
கரூர்:
நோயாளிகளை பார்க்க, தேவையில்லாமல் மருத்துவமனைக்கு குழந்தைகளை, உறவினர்கள் அழைத்து வரக்கூடாது என தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் இயக்குநர் சாந்தி மலர் தெரிவித்தார்.கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த, இயக்குநர் சாந்தி மலர் நிருபர்களிடம் கூ றியதாவது:
கரூர், புதுக்கோட்டையில் புதிதாக, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்படுகிறது. கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில் இருந்து, முதல் பேட்ஜ் மாணவர்கள், அடுத்தாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்து வெளியே செல்கின்றனர். இதனால், கூடுதல் ஆப்ரேஷன் தியேட்டர், கூடுதல் டாக்டர்கள், கூடுதல் மருத்துவ பிரிவு களை கொண்டு வருவது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிவுகள் அரசு க்கு அனுப்பபட்டு, மத்திய, மாநில அரசுகளிடம், உரிய நிதி பெற்று வசதிகளை அதிகப்படுத்த முடியும்.ஒரே நாளில், அனைத்து வசதிகளையும் செய்ய முடியாது. படிப்படியாகதான், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிக்க முடியும். அதற்காக, ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், நோயாளிகளை உறவினர்கள் பார்க்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுகிறது. அப்போது, தேவையில்லாமல் நோயாளிகளை பார்க்க குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வரக்கூடாது.அழைத்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. கரூருக்கு வரும் அவசர கால நோயாளிகளுக்கு, முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, உயர்ரக சிகிச்சை தேவையாக இருந்தால் மட்டும், வேறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.இவ்வாறு தெரிவித்தார்.மருத்துவ கல்லுாரி முதல்வர் தாமோதரன் உடனிருந்தார்.
