தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செட்டிநாடு அரசு வேளாண் கல்லுாரி புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

செட்டிநாடு அரசு வேளாண் கல்லுாரி புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

செட்டிநாடு அரசு வேளாண் கல்லுாரி புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா


UPDATED : செப் 11, 2023 12:00 AM

ADDED : செப் 11, 2023 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2023 12:00 AM ADDED : செப் 11, 2023 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அருகே செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.இங்கு, 317.5 ஏக்கரில் மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு புதிய அரசு வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம் திறக்கப்படும் என அறிவித்தனர். அதன்படி கல்லுாரி கட்டடத்திற்கான கட்டுமான பணிக்கென ரூ.58 கோடியை அரசு ஒதுக்கியது. இந்நிதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்நிதியில் வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய வகுப்பறை கட்டடம், தேர்வு கூடம், விடுதி, வயல்வெளி ஆய்வு கூடம், பசுமை குடில்கள் கட்டப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் சிதம்பரம், அமைச்சர் பெரியகருப்பன், கார்த்தி எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., பங்கேற்றனர். வேளாண்மை கல்லுாரி முதன்மை அலுவலர் பாபு, செயற்பொறியாளர் சதீஷ்குமார், பேரூராட்சி தலைவர்கள் கானாடுகாத்தான் ராதிகா, பள்ளத்துார் சாந்தி, பள்ளத்துார் கே.எஸ்.,ரவி, அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us