UPDATED : செப் 11, 2023 12:00 AM
ADDED : செப் 11, 2023 05:34 PM
தேனி:
தேனி மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) பணிக்கான தேர்வு இரு மையங்களில் நடந்தது.தேர்வினை 633 பேர் எழுதினர். தேர்வர்கள் 137 பேர் ஆப்சென்ட் ஆகினர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 33 வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) பணியிடங்களுக்கு பி.எட்., முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதற்கான தேர்வு நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடந்தது.தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி ஆண்கள் பள்ளியில் 370 பேர், நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400 பேர் என மொத்தம் 770 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் நேற்று நடந்த தேர்வில் ஆண்கள் 302 பேர், பெண்கள் 331 பேர் என 633 பேர் தேர்வு எழுதினர். ஆண்கள் 68 பேர், பெண்கள் 69 பேர் என 137 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
