UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 09:15 AM
அ நிறம் | அளவு
இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, முதல்வரின் திறனறி தேர்வு செப்., 23ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. பிளஸ் 1 மாணவர்களின் வேதியியல் தேர்வுக்கு மறுநாள், இந்த தேர்வு நடப்பதாக இருந்தது. அதனால், காலாண்டு தேர்வுக்கு படிப்பதா, முதல்வரின் திறனறி தேர்வுக்கு படிப்பதா என மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதை தொடர்ந்து முதல்வரின் திறனறி தேர்வு 23ம் தேதிக்கு பதில் 30ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா பிறப்பித்துள்ளார்.
