மத்திய அரசு குடிமைப்பணிக்கு நிதியுதவி பெறும் எழுத்து தேர்வு
மத்திய அரசு குடிமைப்பணிக்கு நிதியுதவி பெறும் எழுத்து தேர்வு
UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 07:22 AM
விழுப்புரம்:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு குடிமைப்பணிக்கு தமிழக அரசின் நிதியுதவி பெறுவதற்கான எழுத்து தேர்வு விழுப்புரத்தில் நடந்தது.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவு, அமைச்சர் உதயநிதி மூலம் கடந்த மார்ச் 7ம் தேதி துவங்கப்பட்டது. இந்த தேர்வு பிரிவு தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் மத்திய குடிமைப் பணி தேர்வுக்கு பயிலும் ஆயிரம் மாணவர்கள் மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை தேர்வுக்கு தயாராக ஒவ்வொரு மாணவருக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்கப்படுகிறது.இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. இதன்படி விழுப்புரத்தில் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடந்தது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர். தேர்வர்களை மாவட்ட கல்வித்துறை மூலம் அலுவலர்கள் மையங்களில் கண்காணித்தனர்.
