UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 09:19 AM
புதுச்சேரி:
மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வினியோகம் செய்யபடுகிறது.புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கழகத்தின் மூலம், தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி, ஆரிஒர்க் பயிற்சி, மாடி தோட்டம் அமைத்தல், காளான் வளர்ப்பு, ஆட்டோ டிரைவர், அலங்கார நகை செய்தல், மண் பொம்மைகள் செய்யும் பயிற்சி, சோப்பு ஆயில் மற்றும் பினாயில் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.பஞ்சு பொம்மை தயாரிக்கும் பயிற்சி, குரோஷா பின்னல் பயிற்சி, உணவு மதிப்பு கூட்டுதல் பயிற்சி, தேனி வளர்ப்பு பயிற்சி, மாற்றுத்திறனாளிகளுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி, ஒயர் நாற்காலி பின்னல் பயிற்சி, மர சிற்பகலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு 0143-2963157, 9944338233 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
