தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணிக்கு ஏற்ப ஊக்கத்தொகை அரசு டாக்டர்கள் போராட்டம்

பணிக்கு ஏற்ப ஊக்கத்தொகை அரசு டாக்டர்கள் போராட்டம்

பணிக்கு ஏற்ப ஊக்கத்தொகை அரசு டாக்டர்கள் போராட்டம்


UPDATED : செப் 14, 2023 12:00 AM

ADDED : செப் 14, 2023 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2023 12:00 AM ADDED : செப் 14, 2023 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பணிக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கும் அரசாணையை அமல்படுத்தக்கோரி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர், சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தை முற்றுகை யிட்டு, போராட்டம் நடத்தினர்.டாக்டர்களுடன், மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். அரசாணை 293ஐ அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால், உடனே அமல்படுத்தக் கோரி, அரசு டாக்டர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் 74 பேரை போலீசார் கைது செய்தனர்; இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இதுகுறித்து, சங்கத் தலைவர் செந்தில் கூறியதாவது:
அரசாணை வெளியிட்டதோடு சரி; அவற்றை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பணிக்கு ஏற்ப, ஊக்கத்தொகை வழங்கப்படாததால், நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே, அரசாணையை அமல்படுத்தக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டோம். கோரிக்கையை ஏற்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us