சனாதன எதிர்ப்பு பேச்சுப் போட்டி: கடும் எதிர்ப்பால் வாபஸ்..!
சனாதன எதிர்ப்பு பேச்சுப் போட்டி: கடும் எதிர்ப்பால் வாபஸ்..!
UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 10:12 AM
ஆனால், தாங்களாக சுயமாக அனுப்புவது போல் மாணவிகள் சனாதன எதிர்ப்புக் கருத்துகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில், சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை கொசுவை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டுமென பேசியது சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து சனாதனத்தை ஒழிக்கத்தான் திமுக ஆரம்பிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என பேசி வந்தார்.அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மத உணர்வுகளை புண்படுத்த கூடாதெனவும், பா.ஜ.,வுக்கு சாதகமான மாறுமென கூட்டணி கட்சிகள், திமுகவுக்கு எதிராக திரும்பியதால், ஸ்டாலின் சமாதான தூதுவராக மாறினார்.இந்நிலையில், திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான பூண்டி கலைவாணன், திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருக்கு (செப்.,11) அனுப்பிய கடிதத்தில், மாணவிகள், சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துக்களை அண்ணாதுரை பிறந்தநாளான செப்.,15ம் தேதி மாலை 3 மணிக்குகாட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கூறியிருந்தார்.நேற்று முந்தினம் (செப்.,12) கல்லூரி முதல்வர் ராஜாராமன், அனைத்து துறை தலைவர்கள், மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மாணவிகள், சனாதன எதிர்ப்பு பற்றிய ஆழந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு, திமுக மா.,செ.,வின் அறிக்கையில் இடம்பெற்றதை போன்று வரி மாறாமல் பகிர்ந்திருந்தார்.பேச்சு போட்டி என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் மத்தியில் சனாதன எதிர்ப்பை திணிக்க முயன்ற கலைவாணனின் லெட்டர்பேடு மற்றும் திருவாரூர் அரசு கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.பா.ஜ., மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா டிவிட்டரில் தமிழக அரசின் அப்பட்ட ஹிந்து விரோத போக்கு எல்லை மீறுகிறது. விளையாட்டு துறை அமைச்சர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என பிதற்ற, திருவாரூர் தி.மு.க எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனின் அழுத்தத்தால் திரு.வி.க அரசு கல்லூரியில் மாணவிகள் சனாதன எதிர்ப்பு குறித்து வலுக்கட்டாயமாக பேச அழைக்கப்படுகிறார்கள் என கடும் கண்டனம் தெரிவித்தார்.கல்வி நிலையங்களில் அரசியலை திணிக்கும் திமுகவுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்தன.இதனை தொடர்ந்து, திருவாரூர் திரு.வி.க.,அரசு கல்லூரி முதல்வர் சார்பில் நேற்று (செப்.,13) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரி மாணவிகள் சனாதனம் பற்றிய முதல்வரின் சுற்றறிக்கையின்படி அல்லாமல், சொந்த விருப்பத்தின் பேரில் மேற்காண் பொருள் குறித்து செயல்படுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
