லேண்டர் மாதிரி தத்ரூபமாக காட்சிப்படுத்திய மாணவர்கள்
லேண்டர் மாதிரி தத்ரூபமாக காட்சிப்படுத்திய மாணவர்கள்
UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 10:11 AM
இதில் இஸ்ரோ முன்னாள் துணை பொது மேலாளர் செல்வராஜ் பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் போஸ், தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 20 பள்ளிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், மாணவர்கள், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது போல், பள்ளி வளாகத்தில் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதோடு, செயல்முறை விளக்கம் அளித்தது, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.தவிர சந்திரயான் விண்கலம் போன்ற விண்வெளி ஆராய்ச்சி குறித்த பதிவுகளையும், மாணவ - மாணவியர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், இஸ்ரோ மற்றும் பி.எஸ்.எல்.ஏ., ஏவுதளத்தில் பணியாற்றும், 50 தமிழர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் டிவியில் பார்க்கும்போது சந்திரயான் - 3 லேண்டரின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளும் பணிகள் குறித்து தெளிவாக விளங்கவில்லை. தற்போது, மாணவர்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கமளித்த போது தெளிவாக புரிந்துக் கொள்ள முடிந்ததாக மாணவ - மாணவியர் கருத்து தெரிவித்தனர்.
