தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய தொழிற்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய தொழிற்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய தொழிற்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : செப் 14, 2023 12:00 AM

ADDED : செப் 14, 2023 06:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2023 12:00 AM ADDED : செப் 14, 2023 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வுக்கு தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு, மாவட்ட அளவில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.விண்ணப்ப படிவம் மற்றும் முழுவிவரங்கள் அடங்கிய வழிகாட்டுதல்களை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறியலாம். விண்ணப்பதாரர்கள் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று இம்மாதம், 18 க்குள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவுக்கு ஏற்ப, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான அடிப்படை கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில், ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; அலைடு தொழிற்பிரிவுகளில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.சி.ஓ.இ. திட்டம் மற்றும் எஸ்.சி.வி.டி. திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்ற தகுதியுடைய முன்னாள் பயிற்சியாளர்களின் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் செப்., 18 ம் தேதி, 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us