UPDATED : செப் 14, 2023 12:00 AM
ADDED : செப் 14, 2023 07:56 PM
சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை பூர்த்தி செய்யும் வகையிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றத்தின் - என்.இ.டி.எப்., தலைவர் அனில் சஹஸ்ரபுதே குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் புதுடில்லியில் நடந்த பாராட்டு விழாவில், துவக்கக் கல்வி, கோவிட் தொற்றுநோய், செயற்கை நுண்ணறிவு - ஏ.ஐ., இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி பேசிய, என்.இ.டி.எப்., தலைவர் அனில் சஹ்ஸ்ரபுதே, ’இந்தியா படிப்படியாக டிஜிட்டல் வல்லரசாக மாறி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு பயனளிக்கும் வகையில், கள ஆய்வுகளுடன் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
